Reply for china 
இந்தியா

அருணாச்சல பிரதேசம் பிரிக்க முடியாத பகுதி

சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள், விசா இல்லாத போக்குவரத்தை அனுமதிக்கும் விதிமுறைகளை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Team

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்று இந்தியா சார்பில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜாம் தாங்டாக் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் 18 மணி நேரம் காக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில், வெளியுறவுத்துறை சார்பில் சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள், விசா இல்லாத போக்குவரத்தை அனுமதிக்கும் விதிமுறைகளை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.