தேர்தல் பத்திர விவகாரத்தில் மிரட்டி பணம் பறித்தார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிந்துள்ள வழக்கை சிஐடிக்கு மாற்றுவது குறித்து நீதிமன்றத்தின் அனுமதியை பெற பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 27 ஆம் தேதி, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் படி பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் நிர்மலா சீதாராமன், சில அமலாக்கத்துறை அதிகாரிகள், பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை மேலும் விசாரிக்க ஏதுவாக அதை சிஐடிக்கு மாற்ற வேண்டும் என அரசுக்கு பெங்களூரு போலீசார் பரிந்துரைத்துள்ளதாகவும், அதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.