Drug arrest 
இந்தியா

கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக அமைச்சரின் சகோதரர் கைது

மாநில அமைச்சர் பிரதிமா பக்ரியின் சகோதரர் அனில் பக்ரிக்கும் கஞ்சா கடத்தலில் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டு அவரும் கைது

Web Team

மத்திய பிரதேச மாநிலத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டார். சத்னா பகுதியில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க போலீசார் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர். அப்போது மாரூன்ஹா கிராமத்தில் உள்ள பங்கஜ் என்பவரது வீட்டில் நெல் மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், மாநில அமைச்சர் பிரதிமா பக்ரியின் சகோதரர் அனில் பக்ரிக்கும் கஞ்சா கடத்தலில் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.