Amitsha 
இந்தியா

காங்கிரஸ் தான் வாக்கு திருட்டில் ஈடுபட்டது-அமித்ஷா

இந்தியாவில் முதல்முறையாக வாக்கு திருட்டு நடைபெற்றது நேரு ஆட்சியில் தான் என கடுமையாக சாடியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா

Web Team

இந்தியாவில் முதல்முறையாக வாக்கு திருட்டு நடைபெற்றது நேரு ஆட்சியில் தான் என கடுமையாக சாடியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா காந்தி வாக்களித்தது எப்படி எனவும் மக்களவையில் வினவியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது பதிலளித்து பேசிய அமித்ஷா, வல்லபாய் பட்டேலை தோற்கடிப்பதற்காக முதல்முறையாக நேரு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும் பின்னர் இந்திரா காந்தியும் அதை செய்ததாகவும் குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.