ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய மாணவர்கள் சேர்க்கையால் சர்ச்சையில் சிக்கி அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு ஆளான வைஷ்ணவி தேவி மருத்துவக்கல்லூரியில், மருத்துவர் கனவுடன் சென்ற மாணவர்கள் தற்போது எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கல்லூரியை விட்டு வெளியேறி வருகின்றனர். தங்கள் வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் திடீரென்று கிழித்தெறியப்பட்டது போல் உணர்வதாக வேதனை தெரிவித்த மாணவர்கள், கல்லூரியை மூடும் முடிவு ஒரு பொறுப்பற்ற செயல் என்று குற்றம் சாட்டினர்.