Bihar election 
இந்தியா

பீகாரில் என்டிஏ கூட்டணியில் அதிருப்தி குரல்கள்

ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியதால் தமது கட்சிக்குள் அதிருப்தி அலை ஏற்பட்டுள்ளதாக உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Web Team

பீகாரில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீட்டு முடிவுக்கு எதிராக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பீகாரில் என்டிஏயின் முக்கிய கட்சிகளான பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து எஞ்சிய 41 தொகுதிகள் சிறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 இடங்களும், ஜிதின் ராம் மாஞ்சி,உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு தலா ஆறு இடங்களும் ஒதுக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு குறைவான இடங்களை ஒதுக்கி தங்களை பாஜக தலைமை குறைத்து மதிப்பிட்டு விட்டதாக மாஞ்சி குறை கூறி உள்ளார்.

இதனால் என்டிஏயின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என அவர் கூறிய நிலையில், ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியதால் தமது கட்சிக்குள் அதிருப்தி அலை ஏற்பட்டுள்ளதாக உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.