தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், சற்று நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு மக்கள் ரயில் மூலம் செல்ல முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி சற்று நேரத்திலேயே நிறைவடைந்தது.
அதே போல் சிறப்பு ரயில்கள் அக்டோபர் 15-ம் தேதி முதல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.