வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங் ((Fauja Singh)) பஞ்சாப் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
"டர்பனெட் டொர்னாடோ" எனப்படும் 114 வயதான ஃபௌஜா சிங், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடைப்பயணத்திற்குச் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
1994 ஆம் ஆண்டில் தனது மகன் உயிரிழந்த துக்கத்திலிருந்து மீள்வதற்காக தனது 89 வயதில் ஃபௌஜா சிங் மாரத்தானில் கலந்து கொள்ள தொடங்கி பல்வேறு போட்டிகளில் ஓடியுள்ளார்.
2000 முதல் 2011 வரை எட்டு மராத்தான் பந்தயங்களில் பங்கேற்றதன் மூலம் ஃபௌஜா சிங் மிகவும் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரராக அறியப்பட்டார்.