Modi india in 4th 
இந்தியா

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறி உள்ளது ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டு 4 ஆம் இடத்தில் இந்தியா..!

ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Srini Vasan

ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் நான்கு டிரில்லியனை எட்டி விட்டது என நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் கூறிய சில நாட்களில் அதை மோடி உறுதிப்படுத்தி உள்ளார்.

தாம் 2014 ல் பிரதமராக பொறுப்பேற்ற போது இந்தியா பொருளாதார நிலையில் 11 ஆவது நாடாக இருந்த தாகவும், இந்த பத்து ஆண்டுகளில் இது நான்காவது இடத்திற்கு முன்னேறி விட்டதாகவும், அது நமக்கெல்லாம் பெருமை எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

நம்மை 250 ஆண்டுகள் ஆண்ட பிரிட்டனை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.