இஸ்லாமிய ஆண் அனைத்து மனைவிகளையும் சமமாக நடத்தினால் பல பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம் என அலகாபாத் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஃபுர்கான் என்ற நபர் தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டதாக பெண் புகார் அளித்த நிலையில் அந்நபருக்கு Moradabad நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதனை ரத்து செய்ய கோரி அந்நபர் தொடர்ந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, இஸ்லாமிய ஆண் நான்கு முறை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவதால், அந்த நபர் எந்த குற்றமும் செய்யவில்லை என தெரிவித்துவிட்டு விசாரணையை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.