இந்தியாவின் Chicken Neck வழித்தடம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசுவோர், இதே போல் வங்காளதேசத்திலும் இதுபோன்ற இரண்டு குறுகிய நிலப் பகுதிகள் உள்ளன, அவை "மிகவும் பாதிக்கப்படக்கூடியவை" என்பதை அவர்கள் கவனிக்க வேண்டும் என்றும் இதனை மறந்து விடக் கூடாது என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா எச்சரித்துள்ளார்.
முன்னதாக சீனா சென்றிருந்த வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டவை என்பதால் வங்காள விரிகுடாவின் ஒரே பாதுகாவலர் வங்கதேசம் தான் என்றும், எனவே சீனா தங்களது பொருளாதார செல்வாக்கை வங்கதேசத்திற்கு விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, தற்போது முகமது யூனுசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேசத்தின் குறுகலான வழிகளை குறிப்பிட்டு வரைபடத்தை பகிர்ந்துள்ளார்.