40 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் முகத்தில் சிறுநீர் கழித்து, கொடிய வைரஸை ஊசி மூலம் செலுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கர்நாடக பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது 6 பிரிவுகளின் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அவரது கூட்டாளிகளான வசந்தா, சன்னகேசவா மற்றும் கமல் ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு மதிகேரில் உள்ள முனிரத்னாவின் அலுவலகத்தில் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில், இந்த வழக்கையும் சிறப்பு புலனாய்வுக் குழுவே விசாரிக்க பரிந்துரைக்கப்படும் என காவல் உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.