Bihar YMC 
இந்தியா

தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஓவைசி கட்சி முடிவு

தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளதால், 3-ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.

Web Team

பீஹார் சட்டசபை தேர்தலில் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி 100 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக மாநில தலைவர் அக்தருல் இமான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளதால், 3-ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.

மேலும், பல ஆண்டுகளாக பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியை மையமாகக் கொண்டே அரசியல் நடந்து வருவதாக தெரிவித்த அவர், பீஹாரில் 3-ஆவதாக புதிய மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.