கர்நாடகத்தில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலருக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளால் சமுதாயத்தில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கும் அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து, அரசு கட்டடங்களில் RSS நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.