ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ரஷ்ய கச்சா எண்ணெய் நுகர்வோராக திகழ்ந்து வந்த ரிலையன்ஸ் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடைகளின் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தியாகும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.