கோடீஸ்வரி...
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிம்லா தேவி என்ற பெண் 7 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரி டிக்கெட் ஒன்றுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றபோது எதேச்சையாக வாங்கிய டிக்கெட் அவரை கோடீஸ்வரராக்கி உள்ள நிலையில், பரிசுத்தொகையை வைத்து குழந்தைகளுக்காக புதிய தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பிம்லா தேவி, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
புகுந்த வீட்டிற்கு ’ட்ரெக்கிங்’
உத்தரகாண்ட் மாநிலம் உடாவா கிராமத்தில், சாலை வசதி இல்லாததால் திருமணமான பெண் தனது கணவர் வீட்டிற்கு சுமார் 18 கி.மீ. கரடுமுரடான பாதையில் நடந்து சென்றார். கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை என்பதால் மணக்கோலத்திலேயே பெண்ணை நடக்க வைத்து உறவினர்கள் அழைத்துசென்றது வைரலாகி வருகிறது.
நாட்டு நாய்களை பாதுகாக்க...
இயற்கை வளங்கள் மற்றும் நாட்டு நாய்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, திலீபன் என்ற இளைஞர், தன் செல்லப்பிராணியான ‘ஹேப்பி’ என்ற நாயுடன் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சென்னையை சேர்ந்த இளைஞரான திலீபன் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, பயணம் செய்யும் வழிகளில் பனை விதைகள் நடவு செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.