10 
இந்தியா

கர்நாடகாவில் சித்தராமய்யா முதல்வராக நீடிப்பார்..

முதலமைச்சர் பதவியை பங்கிட்டு கொள்வது குறித்து கர்நாடக காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில், சித்தராமய்யா, ஐந்தாண்டுகளுக்கும் முதலமைச்சராக தொடர்வார் என மூத்த காங்கிரஸ் தலைவரான ஆர்வி தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

Web Team

காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமய்யாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் முதலமைச்சராகவும் இருப்பார்கள் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் விரைவில் இரண்டரை ஆண்டுகால பதவியை நிறைவு செய்ய உள்ள சித்தராமய்யா முதல்வர் நாற்காலியை விட்டுத் தர மறுப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே அவரது ஆட்சியில் ஊழல் மலிந்து நிர்வாகம் சீர்கெட்டு விட்டதாக கட்சிகுக்குள் அதிருப்தி குரல் அதிகரித்துள்ளது.