BNG Car fire 
இந்தியா

சாலை தடுப்புச் சுவரில் மோதி கார் தீப்பிடித்தது

காருக்குள் சிக்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர் சாலிமத், வெளியே வர முடியாமல் உள்ளேயே கருகி இறந்தார்.

Web Team

கர்நாடகாவில் சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி தீப்பிடித்து, இன்ஸ்பெக்டர் உயிருடன் எரிந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தார்வாட் மாவட்டம் அன்னிகேரி நகரின் புறநகரில் ஹாவேரி லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் பஞ்சாக்ஷராய சாலிமத், கடக்கில் உள்ள குடும்பத்தினரை சந்திப்பதற்காக காரில் சென்றார். ஹுப்ளி வழியாக சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புச் சுவரில் கார் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில், காருக்குள் சிக்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர் சாலிமத், வெளியே வர முடியாமல் உள்ளேயே கருகி இறந்தார்.