26 
இந்தியா

வாடிக்கையாளர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.. பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் கறார் உத்தரவு

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் மரியாதையுடன் நடந்து கொள்வதை உறுதி செய்யுமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் மரியாதையுடன் நடந்து கொள்வதை உறுதி செய்யுமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கையாளுவதில் வங்கி ஊழியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என பொதுத்துறை வங்கி தலைவர்களுக்கு நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவை துறை செயலாளர் நாகராஜு உத்தரவிட்டுள்ளார்.

வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை உறுதிப் படுத்த அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.