BNG Boys harrasment 
இந்தியா

பைக்கில் பெண்ணை துரத்திச் சென்ற இளைஞர்கள்

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் பரவிய நிலையில், போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Manigandan Raja

பெங்களூருவில் இருசக்கர வாகனத்தில் பெண்ணை துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சில்க் போர்டு சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் பரவிய நிலையில், போலீசார் மூவரையும் கைது செய்தனர்.