30 
இந்தியா

டெல்லியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம்.. பயிற்சி முகாமில் திமுக, அதிமுக, நாதக பிரதிநிதிகள் பங்கேற்பு

டெல்லி இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

Srini Vasan

டெல்லி இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் பயிற்சி முகாமில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், சரிபார்ப்பு மற்றும் பட்டியல் தயாரிப்பது, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இரு நாட்கள் நடைபெறும் இம்முகாமில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.