கார்வெடிப்பை நிகழ்த்திய மருத்துவர் உமர் நபி சதிச்செயலை நியாயப்படுத்தி பேசிய வீடியோவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இருந்து நீக்கியதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு முன், உமர் நபி தற்கொலைப்படை தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய வீடியோ அதிகம் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.