இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கிஹாரா மினோரு, வெளியுறவு அமைச்சர் யோகோ கமிகாவா ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்வது, இரு நாடுகளுக்கு இடையேயான ஈடுபாடுகளை மேலும் வலுப்படுத்த புதிய முயற்சிகளை ஆராய்வது, பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்வது, ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவும் ஜப்பானும் 'சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை பகிர்ந்து கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.