7 
news

2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. பறிபோன தலைமை காவலரின் உயிர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த ஆஷிக் அகமது என்பவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது காரில் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் அருகே உள்ள அரியமான் கடற்கரைக்கு சென்று விட்டு மீண்டும் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பரமக்குடி அருகே நென்மேனி என்ற இடத்தில் வந்தபோது ராமநாதபுரம் நோக்கி சென்ற காரும் தலைமை காவலரின் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலைமை காவலர் ஆஷிக் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பரமக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.