இந்தியாவில் நிர்வாக அமைப்பை விட்டு விலகி வெளியே இருக்கும் 90 சதவீத மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என மத்திய அரசுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். அந்த 90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வி அறிவும் இருந்தும்கூட, நிர்வாக அமைப்புடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.