இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இஷான் கிஷன் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையிறுதியில் பி.வி.சிந்து
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதியில் சீன தைபே வீராங்கனை சியூ பின்-சியானை 21-க்கு13, 21-க்கு14 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். 39 நிமிடங்களில் வெற்றியை பதிவு செய்த சிந்து, அரையிறுதியில் ஜப்பானின் ஹினா அகேச்சியை எதிர்கொள்கிறார். இதன்மூலம் இத்தொடரில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக சிந்து மட்டுமே எஞ்சியுள்ளார்.