மூன்றாம் உலக நாடுகளில் இருந்து யாரும் அமெரிக்காவிற்கு குடியேற நிரந்தர தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, லட்சக்கணக்கானோரை திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு முன்னோட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் அதிபர் பைடனை கிண்டலடிக்கும் விதமாக 'ஸ்லீப்பி ஜோ பைடனின் ஆட்டோபென்' என திட்டத்திற்கு பெயர் வைத்து அதன் முலம் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.