55 
news

படகு தீப்பிடித்த விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு. படகு தீப்பிடித்த விபத்தில் 9 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் படகு தீப்பிடித்த விபத்தில் 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இந்தோனேசியாவின் வடக்கு மலுகு தீவில் பெனி லவோஸ் மாகாணத்தில் ஆளுநர் தேர்தல் நடைபெறவுள்ளது.

Srini Vasan

இந்தோனேசியாவில் படகு தீப்பிடித்த விபத்தில் 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு தீவில் பெனி லவோஸ் மாகாணத்தில் ஆளுநர் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆளுநர் வேட்பாளரான பென்னி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அங்குள்ள பகுதிகளுக்கு படகில் சென்று பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த படகில் தீப்பிடித்தது.காற்றின் வேகம் காரணமாக படகு முழுவதும் மளமளவென தீ பரவி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் படகு தீக்கிரையாகி சாம்பலானது.