New Project - 2025-05-19T065705 
news

மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து... 16 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் பத்திரமாக மீட்பு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேலும் ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 16 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Srini Vasan

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேலும் ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 16 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

ஹைதராபாத் புறநகர் பகுதியான மைலார்தேவ்பள்ளியில் மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, பிரதான படிக்கட்டு பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் செய்வதறியாமல் தவித்த குடியிருப்பு வாசிகள் அலறி அடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் மொட்டை மாடியில் தவித்தவர்களை ஏணி மூலம் மீட்டனர்.