Mamallapuram temple news 
news

தலசயன பெருமாள் கோவிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7 ஆம் விழாவாக தேரோட்டம் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் தலசயன பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர்.

மாட வீதிகளில் வலம் வந்த பெருமாளை வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.