ஆந்திர மாநிலம் கடப்பாவில், சாலையில் அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிய 2 பேர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், ஒரு மாணவன் உயிரிழந்த நிலையில் மற்றொரு மாணவன் படுகாயமடைந்தான். தற்போது சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.