புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன்விடுதி கிராமத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை கணவரின் வீட்டின் முன் வைத்து உறவினர்கள் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்த புவனேஸ்வரி என்ற பெண், தனது வீட்டின் அருகே இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.