புதுச்சேரியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் தனது பெயர் இல்லாததை கொண்டாடிய ஏனாம் காவல் ஆய்வாளர், சக போலீசாருக்கு காவல்துறை வாகனத்திலேயே சாராயம் மற்றும் கள் விருந்து கொடுத்து கும்மாளமடித்த வீடியோ வெளியாகியுள்ளது.
புதுச்சேரி காவல்துறையில் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து கடந்த 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஏனாம் காவல் நிலைய ஆய்வாளர் ஆடலரசு, தனது பெயர் இடம்பெறவில்லை என வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் வழக்கு தொடர்பாக புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வந்து திரும்பியபோது ஆடலரசு, உதவி ஆய்வாளர் கட்ட சுப்புராஜ் உள்ளிட்டோர் வேனிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.