news

கோவில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயற்சி.. இருவர் தப்பியோடிய நிலையில் ஒருவரை பிடித்த கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடமுயன்ற 3 பேரில், இருவர் தப்பியோடிய நிலையில் பொதுமக்கள் ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Admin News Tamil

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடமுயன்ற 3 பேரில், இருவர் தப்பியோடிய நிலையில் பொதுமக்கள் ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கமலாபுரம் பிரிவு சாலையிலுள்ள அத்திப்பள்ளம் முருகர் ஆலயத்திற்குள் இரவு நுழைந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு ஊர் பொது மக்கள் அங்கு வந்தபோது கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடிக்க, மற்ற இருவர் தப்பி ஓடினர். விசாரணையில் பிடிப்பட்டவர் மாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பதும் ஏற்கனவே பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.