6 
news

"கத்துக்குட்டி என்பதை மீண்டும் நிரூபித்த அண்ணாமலை"... அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாடல்

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும், அவர் ஒரு அரைவேக்கட்டுத்தனமான அரசியல்வாதி என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக சாடியுள்ளார்.

Srini Vasan

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும், அவர் ஒரு அரைவேக்கட்டுத்தனமான அரசியல்வாதி என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக சாடியுள்ளார். கள்ளர் பள்ளி விவகாரம் தொடர்பாக அதிமுகவின் உண்ணாவிரத போராட்டம் குறித்து மதுரை கோரிப்பாளையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் கலைஞரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவிற்கு திமுகவிடமிருந்து கைப்பேசியில் அழைப்பு வந்ததும் ஓடோடிச் சென்று பங்கேற்றதாக விமர்சித்தார்.