8 
news

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரிக்கை.. அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.

Srini Vasan

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த 600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பதவி மற்றும் ஊதிய உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அமல்படுத்த கோரி பல்கலைக்கழக பதிவாளரை, அண்ணாமலை பல்கலைக்கழக தனி அதிகாரிகள் நல சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது, பதிவாளர் அவமதித்ததாக கூறி அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.