31 
news

பொதுமக்களுக்கு இடையூறாக ஆடல் பாடல் நிகழ்ச்சி.. BTL LIVE MUSIC BAR- மதுபான விடுதி மீது வழக்கு பதிவு

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக சத்தத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக, பி.ட்டி.எல். லைவ் மியூசிக் பார் ((BTL LIVE MUSIC BAR)) என்ற தனியார் மதுபான விடுதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Srini Vasan

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக சத்தத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக, பி.ட்டி.எல். லைவ் மியூசிக் பார் ((BTL LIVE MUSIC BAR)) என்ற தனியார் மதுபான விடுதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். புதுப்பேட்டை எல்.ஜி. கார்டன் சாலையில் செயல்பட்டு வரும் அந்த மதுபான விடுதி, அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி இரவில் செயல்படுவதாக, திருவல்லிக்கேணி துணை ஆணையாளரின் தனிப்படை போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, எழும்பூர் போலீசார் அந்த தனியார் மதுபான விடுதியை கண்காணித்தபோது, அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் பாடல் வைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியது தெரியவந்தது.