26 
news

இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரத்து.. வங்கதேச இடைக்கால அரசின் அமைச்சர் தகவல்

இந்தியாவுடன் ஷேக் ஹசீனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு அமைச்சர் தவுஹீத் உசைன் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

வங்க கடற்பகுதியை ஒட்டிய இடங்களில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதால், சர்வே கப்பல் என்ற போர்வையில் சீனா உளவு பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் சில நங்கூரமிட்டுள்ளதும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. சீன சர்வே கப்பலான Xiang Yong Hong 03 வங்காள விரிகுடாவில் பல வாரங்கள் தங்கியதுடன் ஒரு கட்டத்தில் சென்னைக்கு 380 நாட்டிகல் மைல் அருகே வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் உலா வருவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.