சென்னை பெசண்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் பெருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 8-ம் தேதி வரை பெருவிழாவின் நிகழ்வுகள் 11 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்வான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வரும் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. புனித வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.