திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாததால், நடிகர் ரஜினிகாந்தை வைத்து கட்சியில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிள்ளையார் சுழி போட்டிருப்பதாக, அதிமுக துணைப் பொது செயலாளர் கேபி முனுசாமி குற்றம் சாட்டினார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுக்கு நீண்ட காலம் உழைத்த சீனியர் அமைச்சர் துரைமுருகன் உள்பட மூத்த தலைவர்களை கட்சியை விட்டு வெளியேற்ற நடிகர் ரஜினியை வைத்து அவமானப்படுத்தியதாக தமக்கு சந்தேகம் எழுவதாக கூறினார்.