தபால் சேவையை நிறுத்த முடிவு :
50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்துவரும் பதிவு தபால் சேவையை நிறுத்தவுள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பதிவு தபால் சேவையை விரைவு தபால் சேவையுடன் இணைக்கவும் முடிவு செய்துள்ளது.
அஞ்சல் துறை வழங்கிவரும் பதிவு தபால் சேவை மிகவும் நம்பகத்தன்மையானது. இந்த சேவை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. பதிவு தபால் மூலம் அனுப்பப்படும் தபால்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது.
வேலைவாய்ப்பு கடிதங்கள், சட்ட அறிவிப்புகள் உள்ளிட்டவைகளுக்காக பதிவு தபால் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு சிறப்புகள் கண்ட பதிவு தபால் மூடுவிழா காணவிருக்கிறது.
2011-12ம் ஆண்டு பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்ட 244.4 மில்லியன் கடிதங்கள்
2019-20ம் ஆண்டு பதிவு தபாலில் அனுப்பப்பட்ட கடிதங்கள் 184.6 மில்லியனாக குறைவு
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் டிஜிட்டல் கடித பரிமாற்றங்கள் அதிகரிப்பு
டிஜிட்டல் முறையில் கடிதங்களை பரிமாறி கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள்
பதிவு தபாலை பயன்படுத்தி வரும் அரசு துறைகள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள்
விரைவு தபால் சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது
சேவை குறைந்தபட்ச கட்டணம்
பதிவு தபால் ரூ.26
விரைவு தபால் ரூ.41
சேவை ஒப்புகை கட்டணம்
பதிவு தபால் ரூ.3
விரைவு தபால் ரூ.10
பதிவு தபால் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றடையும்
விரைவு தபால் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு சென்றடையும்
பதிவு தபாலில் எடை கூடினால் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்
விரைவு தபாலில் எடை கூடினாலும் தூரம் கூடினாலும் கூடுதல் கட்டணம்
அஞ்சல் துறைக்கு போட்டியாக உள்ள தனியார் கூரியர் நிறுவனங்கள்
தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி மக்கள் தள்ளப்படுவார்கள் என கருத்து
பாஜக அரசின் செயல் தனியார் நிறுவனங்கள் பயனடைய செய்யும் - எதிர்க்கட்சிகள்.