13 
news

நீதித்துறையில் உண்மை பற்றாக்குறையாக இருப்பதால் கவலை.. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா கருத்து

நீதித்துறையில் உண்மை பற்றாக்குறையாக இருப்பது, தமக்கு கவலை அளிப்பதாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.

Srini Vasan

நீதித்துறையில் உண்மை பற்றாக்குறையாக இருப்பது, தமக்கு கவலை அளிப்பதாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

உண்மைகளை மறைக்காவிட்டால் வழக்கில் வெற்றி பெற முடியாது என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இது நீதிமன்றத்தின் பணியை கடினமாக்குவதாகவும் சஞ்சீவ் கண்ணா குறிப்பிட்டார்.

விழாவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு சஞ்சீவ் கண்ணாவை வாழ்த்தி பேசினர்.