mi 
news

சென்னையில் மீண்டும் Dhoni ?.. யார் உள்ளே..யார் வெளியே..!

IPL 2025 ஆண்டிற்கான retension ,RTM பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.அந்த வகையில்  பிசிசிஐ தனது தலைமையகத்தில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், வீரர்களை தக்கவைப்பது குறித்து 10 அணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியது. அவர்களில் பெரும்பாலோர் 5-6 வீரர்களைத் தக்கவைக்க விரும்பினர், ஏனெனில் அது அவர்களுக்கு அணியின் தொடர்ச்சியைக் கொடுக்கும் மற்றும் அணிகளின் brand valueக்கு முக்கிய பங்கு வகிக்கும் .

Srini Vasan

அவர்களின் கோரிக்கையை எடைபோட்ட பிறகு பிசிசிஐ ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது ,அதன்படி இம்முறை எந்த அணிக்கும் RTM வழங்கப்படாது என்றும் அணிகள் தங்களது வீரர்களில் 5 பேரை retention செய்துகொள்ளலாம் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது .

2022 ல் நடந்த மெகா auction ல் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது அதிலும் (3 இந்தியா வீரர் + ஒரு வெளிநாட்டு வீரர்) அல்லது (2 இந்தியா வீரர் + 2 வெளிநாட்டு) என்ற கணக்கில் மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும் ..அந்த வகையில் இந்த முறை 5 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்றாலும் இந்தியா வீரர்கள் + வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை பிரிவை பற்றி எந்த தகவலும் இன்னும் இல்லை.

இந்நிலையில் எந்தந்த அணிகள் யார் யாரை தக்க வைப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.குறிப்பாக அனைவரது கவனமும் CSK ,Mi ,RCB பக்கம் திரும்பியுள்ளது..

அதன்படி MI அணி - Jasprit Bumrah, Suryakumar Yadav, Rohit Sharma, Hardik Pandya மற்றும் nuwan thusara வை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

RCB அணி - faf du plesis ,Virat Kohli ,Rajat pattidhar ,siraj ,மற்றும் Will jacks தக்க வைக்க வாய்ப்புள்ளது என்றும்

CSK அணி - Ruturaj ,Jadeja ,Shivam Dube , Pathirana மற்றும் Dhoni விளையாட விருப்பம் தெரிவித்தால் முதல் வீரராகவே அவர் தான் தக்க வைக்கப்படுவர் என்று.