சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் பரவி வரும் சூழலில், அவர் ராஞ்சியிலுள்ள தாபாவில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 2025 ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் ஓய்வை அறிவிக்கக்கூடும் என கூறப்படுகிறது.