நடிகர் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்திலிருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவித்துள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் அப் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.