அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வெளியேறினார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் பல கோடிகளை நன்கொடையாக வழங்கினார்.
தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அதற்கு கைமாறாக அமெரிக்க அரசில் புதிதாக அரசாங்க செயல்திறன் என்ற துறையை உருவாக்கி, கூட்டாட்சி அதிகாரத்துவத்தை நெறிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கான தலைமை பொறுப்பில் எலான் மஸ்க்கை நியமித்தார்.
தற்போது அவரது பதவிகாலம் முடிவடைந்த நிலையில் பதவியில் இருந்து விலகுவதாக தனது வலைதளத்தில் தெரிவித்த மஸ்க் அதிபர் டிரம்ப்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.