2 
news

பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. மருத்துவர் கொலையை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Srini Vasan

கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண் மருத்துவா் கொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டும் என கோஷங்ககள் எழுப்பி பாஜக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.