37 
news

கனமழையால் தரைமட்டமான மாற்றுத்திறனாளி பெண் வீடு.. அரசு உதவ வேண்டுமென கண்ணீர்மல்க கோரிக்கை

திருப்பூரில் கனமழையின் காரணமாக மாற்றுத்திறனாளி பெண்ணின் வீடு இடிந்து தரைமட்டமான நிலையில், அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Srini Vasan

திருப்பூரில் கனமழையின் காரணமாக மாற்றுத்திறனாளி பெண்ணின் வீடு இடிந்து தரைமட்டமான நிலையில், அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். குளத்துப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த ராதா மணி என்பவர் அரசு கொடுத்த தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்கிழமை பெய்த மழையின் காரணமாக அவர் வசித்து வந்த வீடு இடிந்து தரைமட்டமானதாக கூறப்படுகிறது.