rain 
news

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Web Team

கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், வரும் 16ஆம் தேதி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆம் தேதி...
கோயம்புத்தூர்
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
கன்னியாகுமரி
தூத்துக்குடி
நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை

17ஆம் தேதி...
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
கடலூர்
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
செங்கல்பட்டு
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
புதுவை
காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு

18ஆம் தேதி...
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி

19ஆம் தேதி
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.