கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுவதால், 2-வது நாளாக அருவியில் குளிக்க தடை தொடர்கிறது. தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, அணையிலிருந்து விநாடிக்கு 478-கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. .